We love eBooks
    Baixar ஆதி சங்கரரின் ஆன்ம போதம்  (ஞானத்தை தேடி!…): by Praveen Kumar G (Tamil Edition) pdf, epub, eBook

    ஆதி சங்கரரின் ஆன்ம போதம் (ஞானத்தை தேடி!…): by Praveen Kumar G (Tamil Edition)

    Por Praveen Kumar G

    Sobre

    ஆதி சங்கரரின் ஆன்ம போதம் (ஞானத்தை தேடி!...)

    Pages - 333

    ஒருவன் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு வேதங்கள்தான் இறுதி நிலையில் இருக்கிறதென்றால், “பிரஸ்தானத் த்ரயம்” என்று சொல்லப்படும் பகவத் கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத் இவை மூன்றும் அதற்கும் முந்தைய நிலையில் இருந்து நமக்குப் பல விவரங்களைத் தருகின்றன.
    இதற்கும் முன்பாக “பிரகரண கிரந்தங்கள்” என்னும் முதல் நிலையில் ஆதி சங்கரர் இயற்றிய ஆத்ம போதம், தத்வ போதம் போன்ற நூல்கள் நாம் எளிதில் ஞானத்தை அடைய உதவி செய்கின்றன.
    சாதாரண மக்கள் புரிந்துகொள்வதற்கு இவை மூன்றையும் ஆராய்ச்சி நூல் (Thesis or Reference book), பாட நூல் (Text book), வழிகாட்டி அல்லது கையேடு (Guide or Monograph) என்று மூன்று நிலைகளில் இருப்பதாக ஒப்பிட்டுச் சொல்லலாம்.
    அனைவர்க்கும் புரியும்படியாக இன்னும் கொஞ்சம் விவரமான உதாரணம் கொண்டு விளக்கவேண்டும் என்றால்,
    பல கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஒரு அறையில் நாம் சென்று நின்றதும், அங்கே ஒவ்வொரு கண்ணாடியிலும் நம் ஒரே பிம்பம் பல பிம்பங்களாக காட்சி கிடைப்பது எப்படி மாயத்தோற்றம் என்பதை நம் புத்தி கொண்டு புரிந்து கொள்கிறோமோ அதுபோல, இன்று நாம் காணும் இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு தோற்றப் பாகுபாட்டில் காணுகின்ற ஆத்மா ஒன்றே என்பதனை விளக்கி அந்த காணுகின்றவனும் காணப்படும் பொருட்களும் ஒன்றே என்பதனை போதிக்க வருகின்ற வேதம் நம்முடைய புத்தியிலேயே நமக்கு புரிய வைப்பதற்காக பல வழிமுறைகளை கையாளுகிறது.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    Relacionados com esse eBook

    Navegar por coleções