We love eBooks
    Baixar இதைவிட வேறில்லை (Tamil Edition) pdf, epub, eBook

    இதைவிட வேறில்லை (Tamil Edition)

    Por துரை. நந்தகுமார்

    Sobre

    நெளிகின்ற இருள்
    அண்மைக்கும் தொலைவிருக்கிறது
    விழிநுனியிலிருந்து விலகியிருக்கிறது இருந்தபோதும் அறுதியிட்டு கூறமுடியும் ஏதோவங்கே உயிர்த்திருக்கிறது
    இமைகளை சுருக்கிப்பார்த்தாலும்
    இருப்பது துல்லியமாய்த் தெரியவில்லை புலப்பட்டிருக்கிற இருக்குமொன்றுக்கு அனுமானத்தை துணைக்கழைப்பது பிழை முடிவின் முடிவில் விளங்கும்
    தொடக்கத்தின் தொடக்கம் நிகழ்ந்தால் அறுதியிட்டு தெரிவிக்கவியலாது
    சரியானதொரு தொலைவிலிருப்பதை தவிர்த்துவிட்டு அடுத்ததுக்கு நகரமுடிவதில்லை நடுநெற்றிப்பொட்டில் ஒட்டிக் கொண்டிருப்பதை விடென்று விடுவிக்க மறுக்கிறது
    விழிக்குள் சிக்குண்டு மாட்டியிருப்பதை விரைவை துணைக்கழைத்தால் சிலமணித்துளிகள்
    நீளும் மணிகள் நடையென்றால்
    இருளாய் நெளிகிறது பட்டப்பகலில்
    அந்திக்குள் புகவேண்டும் அதென்னயிருள் அயர்ச்சியை புறந்தள்ளி மின்கம்பியை நோக்கியதில்
    அங்கமர்த்திருந்தது நான்கைந்து காக்கைகள்.


    நினைவில்
    கோடை விடுமுறையில்
    ஆனந்தி வீட்டு தோட்டத்தில்
    அம்மு, மல்லிகா, நானும்
    சொப்பு சாமான்கள் குவித்து
    விளையாடிக் கொண்டிருந்தோம்
    விளையாட்டு
    தத்ரூபமாக விளங்க
    அடுப்பு புகைக்கு ஆனந்தி இரும்ப
    மேற்கொண்டு விளையாட்டைத்தொடர மனமின்றி பாதியிலே
    திரும்புகிறேன் வீட்டுக்கு
    இந்நேரம் சமைத்துக்கொண்டிருப்பாள்
    அம்மா.


    சதையாடல்
    என்னோடு சேர்த்து
    இருபத்தி நாலுபேர்
    ஒன்றாய் வசிக்கிறோம்
    எந்தவித பேதமின்றி
    முதியோர் இல்லத்தில்
    பெரும்பாலும் என்பதைவிட
    எப்போதும் ஓய்வுதான்
    அவ்வேளையில் ஆரம்பமாகிறது
    மகன் இப்படி
    மருமகளிப்படியென்று
    திட்டித் தீர்க்கின்றனர்
    அவரவர் முறைவந்தபோது
    செயற்கையாய் வரவழைத்த புரைக்கு
    தலையில் தட்டிக்கொண்டேன்
    மகன் நினைப்பதாய்
    என்முறை வந்தபோது.

    ஈரம்
    எங்கப்போய் தொலைஞ்சிங்க
    காபிகேட்டுட்டு
    திட்டியவளிடம்
    வேலைக்காரியம்மா
    பவ்வியமாய் பதிலளித்துக்கொண்டிருந்தாள் விளக்கேற்றும் நேரம்
    பறவைகள் கூடுதிரும்பும்
    மாடியில் காயப்போட்ட
    குழந்தையின் லங்கோட்டி
    தோஷம் படாமலிருக்க
    எடுத்துவந்ததை.

    வலி
    விளையாட்டின்போது
    ஒருவருக்கொருவர்
    சட்டைக்கிழிய
    அடித்துக்கொண்டதில்
    வலிக்காத வலி
    வலிக்கிறது
    பிளவுபட்ட பம்பரத்தை
    பார்க்க நேரிடும்போதெல்லாம்.

    இதைவிட வேறில்லை
    யாருப்பா?
    .... ....
    அடடா!
    நல்ல மனுஷன்
    எப்பப்பா... எப்படி....
    ச்... ச்... ச்... ச்...

    எல்லோருக்கும்
    தகவல் சொல்லியாச்சா?

    ஏன்னா
    எல்லாருக்கும்
    எல்லாமாயிருந்தவர்

    எப்ப எடுக்கிறாங்களாம்
    நாளைப் பிற்பகலா
    ஆவும்... ஆவும்
    அயல்நாட்டிலிருந்து மகள்கள் வரணுமே.

    சொந்தங்களைவிட
    நண்பர்களாலும்
    எழுத்தாளர்களாலும்
    வீடு வழிந்து
    தெருவைக் கடக்கிறது

    உறவினரொருவரை மறிக்கிறார்
    மூத்த கவிஞர்
    தயங்காமல் கேளுங்க
    எதுவாயிருந்தாலும்
    ...
    படுத்துகிடப்பது
    மனிதநேயம்
    மன்றாடிக் கேட்டுக்குறோம்
    எதுன்னாலும் சொல்லுங்க

    பகுதி
    மதில்சுவர்கள்
    நனைந்திருக்கின்றன
    கண்ணீர் அஞ்சலியில்

    உள்ளே நுழைகிறான்
    பால்யப்பருவத்து நண்பன்
    கதறுகிறான்
    பெயர்ச்சொல்லி...

    முதல்முறையாய்
    வருந்துகிறேன்
    வந்தவனை வாடா...
    என்றழைக்க முடியாததற்கு

    மகள் கதறுகிறாள்
    நல்லவேளை
    நான் மரணத்திலிருக்கிறேன்

    நண்பனும்
    கவிஞனுமாகிய
    ............ன்

    குடும்பத்தாரிடம் கெஞ்சுகிறான்
    குலவழக்கம்
    எதுவாயிருந்தாலும் இருக்கட்டும்

    ‘எரிக்க மனமில்லை
    புதைக்கிறேன்
    பிணமாய்ப் பட்டாம்பூச்சியென்று’
    கவிதை சொன்னவன்

    புதைத்துவிடலாமென்று
    கைதொழுகின்றான்

    கூட்டத்திலிருந்து
    ஒரு குரலின்
    நா தழுதழுக்கின்றது

    யாரழுவது
    அடடா
    வெட்டியானா?
    இதற்கிடையே
    பத்திரிகையில் வந்திருக்கிறேன்
    வருந்துகிறோம் பகுதியில்.

    சற்றுத் தள்ளி
    நடந்துகொண்டிருக்கிறது
    நான் கலந்துகொள்ளமுடியாத
    இரங்கல் கூட்டம்

    எல்லாம் வந்தாகிவிட்டது
    எல்லாம் முடிந்துவிட்டது
    புறப்படத் தயாராக்குகிறார்கள்
    இறுதி பயணத்துக்கு
    என்னை தூக்குகிறார்கள்
    கதறலின் ஊடே
    ... ...
    மனைவி சொல்கிறாள்
    வானவன் அண்ணா
    பார்த்து தூக்கச் சொல்லுங்க
    அடிபட்ட கால் அவருக்கு.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    Relacionados com esse eBook

    Navegar por coleções