We love eBooks
    Baixar குழந்தையை விழுங்கிய முதலை மூன்று ஆண்டுகள் கழித்து உயிரோடு அக்குழந்தையை உமிழ்ந்த அதிசயம் எங்கு நடந்தது தெரியுமா?: அவினாசியப்பரின் அற்புதங்கள் (Tamil Edition) pdf, epub, eBook

    குழந்தையை விழுங்கிய முதலை மூன்று ஆண்டுகள் கழித்து உயிரோடு அக்குழந்தையை உமிழ்ந்த அதிசயம் எங்கு நடந்தது தெரியுமா?: அவினாசியப்பரின் அற்புதங்கள் (Tamil Edition)

    Por சரஸ்வதி

    Sobre

    அவினாசி என்னும் இந்த ஊரின் பழைய பெயர் திருப்புக்கொளியூர். அ + விநாசி, விநாசி என்பது பெருங்கேடு, அ என்பது அகற்றுதல். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஏற்பட்டுள்ள பெருங்கேட்டை அகற்ற வல்லது இத்தலம் என்று பொருள். முன் காலத்தில் கோவிலின் பெயர் அவினாசி. திருப்புக்கொளியூர் என்பது கோவிலின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு ஊரின் பெயர். இன்றும் அந்த ஊர் உள்ளது. காலப்போக்கில் கோவிலை ஒட்டியே நகரம் உருவானதால் இந்த ஊரின் பெயர் அவினாசி என்றானது.

    அவினாசி திருக்கோவிலில் அருள்மிகு கருணாம்பிகை அம்பாளுடன் அவினாசி லிங்கேஷ்ஸ்வர் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் வீற்றுள்ள இத்தாயும் தந்தையும் கருணையே வடிவானவர்கள். அம்மன் சன்னதியில் அம்பாளின் பெயர் பெருங்கருணை அம்மன் என்றே எழுதப்பட்டு இருக்கும். அவினாசியப்பர் சுயம்பு வடிவானவர். காசி விஸ்வநாத சன்னதியில் உள்ள மூலவரின் ஆணிவேர் தெற்கு நோக்கி பூமியின் ஆழத்தில் ஊடுருவி அவினாசியில் லிங்கமாக மலர்ந்து உள்ளது என அகத்திமாமுனிவர் கூறி உள்ளார். இதன் மூலம் இந்த கோவிலில் உள்ள லிங்கம் காசியின் மறு பகுதி அல்லது தென் இந்திய காசி என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

    இந்த திருத்தலத்தில் அவிநாசியப்பர் சன்னதிக்கு அருகில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள நீர் கங்கை நீர் என்று சொல்கின்றன புராணங்கள்.

    அவிநாசியப்பர், அம்மனைப்போலவே கருணையே வடிவானவர். பொதுவாக ஈஸ்வரனை சற்று கோபக்காரனாகவே நாம் தெரிந்து இருக்கிறோம். நக்கீரரை மூன்றாவது கண் கொண்டு எரித்தது, பாண்டிய மன்னனுக்கு கோபத்தை தூண்டி தன்னையே பிரம்பால் அடிக்க வைத்தது போன்ற செயல்கள் இதற்கு சில உதாரணம், அனால் இங்கு அவினாசியப்பர் அம்மனைப்போல கருணையே வடிவானவர்.

    சிவன் சொத்து குல நாசம் என்று சொல்லுவார்கள். சிவன் சொத்தை அபகரிக்க நினைத்தால் அதுவே பெரிய பாவம் என்று கருதப்படுகிறது. இந்த அவினாசி திருத்தலத்தில் ஒரு திருடன் நடராஜர் சிலையின் பாதத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த ஆபரணத்தை களவாட நினைத்து, நடராஜர் சிலையின் காலையே பார்த்துக்கொண்டு இருந்ததால், தன் பாதத்தை இடைவிடாமல் நினைத்த அந்த திருடனுக்கு முக்தி தந்த பெருமான் இந்த அவினியாசியப்பர். இந்த தலத்தில் பல அற்புதங்கள் நிகழ்துள்ளன. அவற்றில் மிக மிக முக்கியமானது மூன்று வருடங்களுக்கு முன் குழந்தையை உண்ட ஒரு முதலை தன் வாயில் இருந்து அதே குழந்தையை மூன்று வருட வளர்ச்சியுடன் வெளிக்கொண்டு வந்த அதிசயம். இந்த அதிசயத்தை திரு சுந்தரமூர்த்தி நாயனார் மூலம் அவிநாசியப்பர் நிகழ்த்தினார். இது மட்டுமில்லாமல், பல அதிசயங்கள் இந்த தலத்தில் அவிநாசியப்பர் மற்றும் பெருங்கருணைத்தாயர் நிகழ்த்தி இருக்கின்றனர். அவற்றை இந்த புத்தகத்தில் நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    Relacionados com esse eBook

    Navegar por coleções