We love eBooks
    Baixar வெற்றி முழக்கம் (உதயணன் கதை): By Na.Parthasarathy (English Edition) pdf, epub, eBook

    வெற்றி முழக்கம் (உதயணன் கதை): By Na.Parthasarathy (English Edition)

    Por Na.Parthasarathy

    Sobre

    வெற்றி முழக்கம் (சரித்திர நாவல்)

    வெற்றி முழக்கம் எனும் இந்நூல் நா.பார்த்தசாரதியால் எழுதப்பட்டது ஆகும்

    வெற்றி முழக்கம் ஒர் அழகிய பெருங்காப்பியத்தின் உரைநடைக் கதை. ஒரு நாவலைப்போன்ற சுவையான அமைப்பும், கதை நிகழ்ச்சிகளின் திருப்பமும், இந் நெடுங் கதை எந்த மூலத்திலிருந்து உரைநடை யாக்கப்பட்டதோ அந்த மூலக் காப்பியத்திலேயே செம்மையாக அமைந் துள்ளன. நான் செய்ததெல்லாம் அவற்றை நல்ல உரை நடையில் கதையாக்கிய வேலை ஒன்று மட்டும்தான். பாஸ் கவியின் சொப்பன வாசவதத்தா, கொங்கு வேளின் பெருங்கதை ஆகிய காவியங்கள் இந்தச் சுவையான கதையைக் கவிதையில் கூறுகின்றன. இவற்றில் தமிழிலுள்ள பெருங்கதை பிற்பகுதியில் சரியாக விளக்கம் பெறாததால் டாக்டர் உ.வே.சா. ஐயரவர்கள் எழுதியுள்ள உதயணன் சரிதச் சுருக்கத்திலிருந்து குறிப்பிட்ட பகுதிக்கான கதையை, நடை மாறாமல் அப்படியே இங்கு எடுத்து அளிக்க நேர்ந்தது. இந்தக் கதையை 'உதயணன்-வாசவதத்தை கதை என்ற பெயரில் சொன்னால் எல்லோருக்கும் புரியும். இதில் வருகிற யூகி, உருமண்ணுவா போன்ற உதயணனின் அமைச்சர்கள் புரிந்த அரசியல் சூழ்ச்சிகள் வியப்பையும் திகைப்பையும் ஊட்டுகின்றன. யூகியின் செயல்களையும் திட்டங்களையும், இந்தக் காவியக் கதையில் படிக்கும்போது சாணக்கியனை நினைவு கூர்கிறோம். வாசவதத்தை, பதுமாபதி, மதன மஞ்சிகை முதலான சிறந்த கதைத் தலைவியர்களை இந்தப் பெருங்கதையில் கண்டு மகிழ்கிறோம். கொங்குவேள் இயற்றிய காப்பியப் பெருங்கதையில் அழகும் ஆழமும் பொருந்திய நயமான உவமைகள் நிறைய வருகின்றன. அந்த உவகைகள் யாவும் உரைநடைக் கதையான இதிலும் உரிய பகுதிகளில் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிற்பகுதி விளக்க மான கதை அமைப்போடு இல்லாமைக்கு மூலக் காப்பியமே காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு யான் இலங்கை வார இதழ் ஒன்றில் இக் காப்பியக் கதையை உரைநடையில் எழுதி வந்தேன். இப்போது உரிய மாறுதல்களுடன் அதுவே, வெற்றி முழக்கமாக வெளி வருகிறது.

    உலக வாழ்க்கையில் பற்றுகள் குறைந்து, மனத்தையும் ஆசைகளையும் வெற்றி கொள்வதுதான் மெய்யான வெற்றி
    என்று அவர்கள் இந்தக் காப்பியத்தின் இறுதியில் உணர்வதாக வருகிறது. இந்த இரண்டு வகை நோக்கிலும் இந்த
    நூலுக்கு, 'வெற்றி முழக்கம்' என்று பேர் வைத்தது பொருத்தமானதுதான். மூன்றாவதாக இந்தக் கதையில் வரும்
    அரசியல் வல்லுனனாகிய யூகி, எல்லாப் பிரச்சனைகளையும் மனத்தினாலேயே வென்று நிற்கிறான் என்பதும் ஒன்று.
    Baixar eBook Link atualizado em 2017
    Talvez você seja redirecionado para outro site

    eBooks por Na.Parthasarathy

    Página do autor

    Relacionados com esse eBook

    Navegar por coleções eBooks similares