நம்ம வீடு கூட அழகான வீடு தான், நமக்கு தான் அந்த அழகை பார்க்க நேரமிருக்கிறது இல்லை.காலையிலே நம்ம போடுற தும்மலுக்கு, மதியமே மிளகு ரசம் வைக்கிற அம்மா , அதட்டினாலும் பாக்கெட் மணியில் கை வைக்காத அப்பா,நம்ம ஸ்வீட்டை அபேஸ் பண்ணுகிற தம்பி, தங்கை.பாக்கெட் மணி பத்தாமல் பேக்கு முழி,முழிக்கும் போது தோளில் கை போட்டு அசால்ட்டா எக்ஸ்ட்ரா பணம் தரும் இன்ஸ்டண்ட் ஏடியெம் அண்ணனும், அக்காவும் இருக்கும் எல்லா வீடும் அழகான வீடு தான்.எது கிடைச்சாலும் ஆட்டைய போடலாம்னு நினைக்கிற நம்ம கூட வீட்டை அழகாக்கிறவுங்கதான். எங்கள் தங்கம் நான் பெத்த சிங்கம்னு நம்ம அம்மா, அடுத்த வீட்டிலேயோ, அடுத்த கேபினின்லேயோ நமக்கு பேனர் கட்டும்போது அது தெரியும்.
ஸ்கூலும் ,கார்ப்ரேட் ஆபீஸும் சேர்ந்தா என்னாகும்? ம்ஹூம்.. அதிகபட்சம் ஒரு வெர்க் ஷாப் ப்ரோகிராம் நடத்தலாம்.வேற என்ன பண்ணமுடியும்..ம்..நான் ஒரு அழகான வீடு பண்ண டிரை பண்ணிருக்கேன். பார்ப்போம் எப்பிடி இருக்குன்னு?
நம்ம ஊரில் இப்போ எல்லாம் பொண்ணுங்களை அவ்வளவு ஈஸியா ஏமாத்தவெல்லாம் முடியறதில்லை. ஆட்டம் போடுற பசங்களை , மாட்டுக்கு வைக்கிற தவுட்டு தண்ணியையே அசால்ட்டா குடிக்க வைக்கிற அலட்டிக்காத பொண்ணுங்க தான் இப்போ ஜாஸ்தி. அப்பிடி ஒரு பொண்ணு தான் நம்ம ஜோ,அவ பிச்சு பெடலெடுக்க போற ஹிரோ கார்த்திக்.இவங்க ரெண்டு பேரும் எப்பிடி மீட் பண்ணிணாங்க, எப்பிடி இந்த பய ,நம்ம மார்டன் பூலான்தேவிகிட்ட மாட்டிக்கிட்டான்.சிக்கின நம்ம பய எஸ்கேப் ஆவானா?ம்ச்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இந்த அழகான வீட்டுகுள்ளே கொஞ்சமா அழுகை, நிறையா அதிரடி, ஏகப்பட்ட துள்ளலான சந்தோஷம் எல்லாம் இருக்கும்.
Unnalae Azhagana Veedu: உன்னாலே அழகான வீடு (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site